நண்பகலில் நீங்கள் ஒரு பூங்காவில் நடந்து செல்கிறீர்கள். அப்போது நிழலில் இருந்து பறந்து வந்த வண்ணமயமான பட்டாம்பூச்சி ஒரு மலர்மேல் அமருகிறது. அது தன்னுடைய உறிஞ்சிக் குழலைக் கொண்டு மலரின் தேனை குடிக்கிறது. சிறிது நேரம் கழித்து அடுத்த மலருக்குச் சென்று அமர்கிறது. இதைப் பார்க்கும்போது சுகமான, கவலையற்ற வாழ்க்கை போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில் பட்டாம்பூச்சிகள் வாழ்வது மிகக் கடினமானதும் ஆபத்துகளால் நிரம்பியதுமாகும்.

மற்ற பூச்சிகளைப் போலவே அவையும் எப்போதும் அழுத்தத்தில் இருக்கின்றன. அவை எடுக்கும் முடிவுகள் – உயிர் பிழைப்பதா அல்லது அழிவதா என்பதையே தீர்மானிக்கும். "எந்தச் செடியில் நான் என் முட்டையை இட வேண்டும்?" "அடுத்த தேனை நான் எங்கிருந்து பெறுவேன்?" "இந்தத் திறந்த இடத்தை நான் பறந்து கடக்க முடியுமா,இல்லை, அங்கே காத்திருக்கும் பறவையால் பிடிபட்டுசாப்பிடப்படுவேனா?" என்று பட்டாம்பூச்சி எப்போதும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
உண்மையில் பட்டாம்பூச்சியின் வாழ்க்கை கடினமானதே. ஆனால், அதைவிடவும் கடுமையான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்து வரும் பிற பூச்சிகளும் உண்டு.
புலி வண்டு வாழ்க்கை
“புலி வண்டு” என்ற பெயர் கேட்டவுடன், இது காட்டில் வாழும் புலி போலவே வேட்டையாடி வாழும் உயிரினம் என நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. இந்தச் சிறிய பூச்சிகள் எப்போதும் ஆபத்தின் விளிம்பில்தான் வாழ்கின்றன – எப்போதும் வேறு உயிரினங்களால் பிடிபடாமல் தப்பிக்கத் தான் போராடிக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும், பல்வேறு வாழ்விடங்களில் புலி வண்டுகளை காணலாம். மிகுந்த கவனத்துடன் பார்த்தால் பாலைவனங்களில், மழைக்காடுகளில், கடற்கரை மணல்வெளிகளில், மலைச்சிகரங்களில்கூட அவை வாழ்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடியும்.மிகக் கடினமான சூழல்களில்கூட, புலி வண்டுகள் வாழ்வதற்கு மிக ஆபத்தான இடங்களையே தேர்ந்தெடுத்து வாழும் போலத் தெரிகிறது.

மொத்தம் சுமார் 2,760 புலி வண்டு இனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை தரையில்தான் வாழ்கின்றன. இவை சின்னச் சின்ன பூச்சிகளையும் சிலந்திகளையும் பிடித்து சாப்பிடும் போது, வேகமாக ஓடிக்கொண்டு, சற்று நின்று, மீண்டும் வேகமாக ஓடிக்கொண்டு என அலைந்து திரிகின்றன. ஆண் வண்டுகள் எப்போதும் பெண் வண்டுகளைத் தேடி அலைகின்றன; ஆனால் பெண் வண்டுகள் அவற்றிலிருந்து தப்பிக்கவோ அல்லது விரட்டிவிடவோ முயல்கின்றன.வெப்பம் அதிகரிக்கும் போது, புலி வண்டுகள் தங்களை வெப்பத்திலிருந்து காத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால் அவை உடனே நிழலைத் தேடி செல்கின்றன. ஆனால் இதைவிட பெரிய சவால்களும் உண்டு . பறவைகள், பல்லிகள், சிலந்திகள், பசியோடு காத்திருக்கும் ராபர் ஈக்கள் போன்ற பல்வேறு உயிரினங்கள் எப்போதும் அவற்றை வேட்டையாட காத்திருக்கின்றன.
இது போன்ற ஆபத்தான சூழல்களில் உயிர் பிழைக்க, புலி வண்டுகளின் நடத்தை மற்றும் உடல் அமைப்பு (physiology) சூழலுக்கேற்ப தழுவப்பட்டுள்ளன. நீங்கள் பொறுமையாக கவனித்துப் பார்த்தால், புலி வண்டுகள் எதிரிகளை ஏமாற்ற பல தந்திரங்களைப் பயன்படுத்துவதை காணலாம். மேலும் உணவைப் பிடிக்க ஒளிந்து செல்வது, உடல் அதிகமாக சூடேறாமல் காத்துக்கொள்வது போன்ற செயல்களில் எப்போதும் ஈடுபட்டிருப்பதை பார்க்க முடியும் .மேலும், புலி வண்டுகள் தாங்கள் வாழும் இடங்களை ஆராயும் விஞ்ஞானிகளுக்குப் பெரும் தகவல்களையும் அளிக்கின்றன. இந்தத் தகவல்கள், அவை வாழும் சூழல்கள் ஆபத்தில் உள்ளனவா என்பதை அறிய உதவுகின்றன.

ஆசிரியர்கள் பற்றி.
டேவ் பியர்சன் – புலி வண்டுகள் குறித்த உலகப் புகழ் பெற்ற நிபுணரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். தற்போது அவர் அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தின் (ASU) உயிரியல் அறிவியல் பள்ளியில் ஆராய்ச்சி பேராசிரியராகப் பணியாற்றுகிறார். நான்சி பியர்சன் – அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தின் (ASU) உயிரியல் அறிவியல் பள்ளியின் ஓய்வு பெற்ற (Emeritus) பேராசிரியர் ஆவார்.
También puedes descargar los Trocitos de Biología en los siguientes formatos:
நூலியல் தகவல்கள்:
- கட்டுரை: உறுதியான, சிறிய புலி வண்டுகள்
- ஆசிரியர்: Dr. Biology
- பதிப்பகத்தார்: Arizona State University School of Life Sciences Ask A Biologist
- தளத்தின் பெயர்: ASU - Ask A Biologist
- வெளியிடப்பட்ட தேதி:
- அணுகிய தேதி:
- இணைப்பு: https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
APA Style
Dr. Biology. (). உறுதியான, சிறிய புலி வண்டுகள். ASU - Ask A Biologist. Retrieved from https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Chicago Manual of Style
Dr. Biology. "உறுதியான, சிறிய புலி வண்டுகள்". ASU - Ask A Biologist. . https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
MLA 2017 Style
Dr. Biology. "உறுதியான, சிறிய புலி வண்டுகள்". ASU - Ask A Biologist. . ASU - Ask A Biologist, Web. https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நார்தர்ன் ட்யூன் டைகர் பீட்டில் (சிசிந்தேலா ஹைப்ரிடா) படம்: ரிச்சர்ட் பார்ட்ஸ் – விக்கிமீடியா காமன்ஸ்.
Tough, Tiny Tiger Beetles
Be Part of
Ask A Biologist
By volunteering, or simply sending us feedback on the site. Scientists, teachers, writers, illustrators, and translators are all important to the program. If you are interested in helping with the website we have a Volunteers page to get the process started.
