Looking for the legacy site? Click here
நுண்ணுயிர்க்கொல்லிகள் vs பாக்டீரியாக்கள்
எழுதியவர்: Tyler Quigley
படங்கள்: Sabine Deviche
மொழியாக்கம்: முனைவர் லோகமாதேவி
ஏதாவது ஒரு விளைவை அல்லது சக்தியை தாங்கும் திறன்; எடுத்துக்காட்டாக ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அல்லது அவற்றை அழித்து ஒட்டுண்ணிகளுக்கெதிரான பாதுகாப்பை உருவாக்குதல்
எதிர்க்கும் திறன் (Resistance): ஏதாவது ஒரு விளைவை அல்லது சக்தியை தாங்கும் திறன்; எடுத்துக்காட்டாக ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அல்லது அவற்றை அழித்து ஒட்டுண்ணிகளுக்கெதிரான பாதுகாப்பை உருவாக்குதல்
குறிப்பிட்ட மூலக்கூறுகளுக்கு பதிலளிக்கும் மற்றும் பிற செல்கள் அனுப்பும் ரசாயன சமிக்ஞைகளை ஏற்கும் செல்களின் மேற்பரப்பில் உள்ள மூலக்கூறு.
ஏற்பி (Receptor): குறிப்பிட்ட மூலக்கூறுகளுக்கு பதிலளிக்கும் மற்றும் பிற செல்கள் அனுப்பும் ரசாயன சமிக்ஞைகளை ஏற்கும் செல்களின் மேற்பரப்பில் உள்ள மூலக்கூறு.
பாக்டீரியாக்களை பலவீனப்படுத்தும் அல்லது அழிக்கும் பொருள்
நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotic): பாக்டீரியாக்களை பலவீனப்படுத்தும் அல்லது அழிக்கும் பொருள்
அறிவியலாளர்கள் ஆய்வகங்களில் பாக்டீரியாக்களை வளர்க்கப் பயன்படுத்தும் வட்டச் சிறு தட்டு.
பெட்ரி தட்டு (Petri dish): அறிவியலாளர்கள் ஆய்வகங்களில் பாக்டீரியாக்களை வளர்க்கப் பயன்படுத்தும் வட்டச் சிறு தட்டு.
பாக்டீரியாக்களை அழிக்க முதன்முதலில் கண்டறியப்பட்ட நுண்ணுயிர்க்கொல்லி மருந்து.
பெனிசிலின் (Penicillin): பாக்டீரியாக்களை அழிக்க முதன்முதலில் கண்டறியப்பட்ட நுண்ணுயிர்க்கொல்லி மருந்து.

நுண்ணுயிர்க்கொல்லிகளின் சுருக்கமான வரலாறு

Moldy bread
சில பூஞ்சைகள் பாக்டீரியாக்களுக்கெதிரான பண்புகளை கொண்டிருக்கும். புகைப்படம் உதவி; Veronidae.

நீங்கள் எப்போதாவது அலமாரியிலிருந்து ரொட்டித்துண்டுகளை எடுக்கச்சென்று, ரொட்டிகளின் மேற்பரப்பில் நீலப்பச்சை நிறத்தில் வளர்ந்திருந்தவற்றை  கண்டதுண்டா? உடனடியாக இருவிரல்களால் அதை எடுத்து குப்பையில் போடவேண்டும் என்றுதான் உங்களுக்கு தோன்றியிருக்கும் அதுதான் நியாயமானதும் கூட.

ஆனால் நீங்கள் ஒரு பண்டைய எகிப்தியராக இருந்திருந்தால் அப்படி அவசரப்பட்டு செய்திருக்க மாட்டீர்கள், குறிப்பாக உங்களுக்கு வேண்டிய யாருக்காவது ஒரு நோய்த்தொற்றோ அல்லது காயமோ உண்டாகி இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அப்படி செய்திருக்க மாட்டீர்கள். உண்மையில் பண்டைய எகிப்து கிரேக்கம், சீனா மற்றும் ரோம் நாடுகளில் இருந்த விஞ்ஞானிகள் ரொட்டிகளில் வளர்ந்திருந்த வித்தியாசமானவைகளையும், சில அழுக்குகளையும் காயங்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தினார்கள். அவர்கள் ஏன் அதை செய்தார்கள்?

நல்லது, இதற்கான சரியான பதிலென்னவென்றால் அவை வேலை செய்திருக்க வேண்டும் என்பதுதான். 1800களின் பிற்பகுதியில்தான் பூஞ்சைகள் மற்றும் அழுக்குகள் நோய்தொற்றுக்களை குணமாக்குவதில் சிறந்து விளங்கியதை விஞ்ஞானிகள்  மிகச்சரியாக புரிந்துகொள்ள துவங்கினார்கள். இதற்கு மிக முக்கியமான உதவியாக இருந்தது பால் எர்லிச் என்னும் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு. அவர் பாக்டீரியாக்கள்  வளர்ந்திருக்கும் தட்டுக்களில்  சாயங்களை சேர்க்கையில் ஒருசில பாக்டீரியாக்களே சாயங்களை உறிஞ்சிக்கொள்ளுவதை கவனித்தார். எனவே அவர் சாயமாக பயன்படும் அதே சமயம் பாக்டீரியாக்களை கொல்லும் ஒரு வேதிப்பொருளை உருவாக்க நினைத்தார்.அவ்வாறு உருவாக்கினால் நோய் சிகிச்சைகளுக்கு அது மிக உதவியாக இருக்குமென்று எண்ணினார். ஏற்கனவே நோய்களை  தீர்க்க பயன்பாட்டில் இருந்த ஒரு மருந்தை கொஞ்சம் மாற்றுவதன் மூலம் இந்த தேடலை  அவர் துவங்கினார்.

Atoxyl
இது பால் எர்லிச் மாற்றியமைத்த அடோக்ஸைல் என்னும்  முதல் நுண்ணுயிர்க்கொல்லியின் வேதி அமைப்பு. மேலும் விவரங்களுக்கு சொடுக்குக

அவரது ஆய்வகத்தில் அடோக்ஸைலின் மூலக்கூறை பலவிதங்களில் மாற்றி அமைத்து, புதிதாக உருவாக்கப்பட்ட மூலக்கூறை முயல்களின் பாக்டீரியா தொற்றை குணமாக்க சோதித்து பார்த்தார். அவ்வாறு 605 முறை மாற்றி அமைக்கப்பட்ட  வேதிப்பொருட்களுடன் சேர்க்கப்பட்ட  மூலக்கூறுகளை முயன்று பார்த்தே அக்காலத்தில் மிகவும் பரவலாக இருந்த சிஃபிலிஸ் நோய்க்கிருமியை கொல்லும் மருந்தை அவர் கண்டறிந்தார்.அந்த மருந்து பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி அவற்றை அழித்ததால் அது நுண்ணுயிர்க்கொல்லி என்று அழைக்கப்பட்ட்து. பண்டைய நாகரீகங்களில் பயன்படுத்தப்பட்ட ரொட்டிகளின் பூஞ்சைகளிலும் அழுக்குகளிலும் கூட இவ்வாறான நுண்ணுயிர்க்கொல்லிகள் இருந்திருக்குமா?

இது முதலில் பைத்தியக்காரத்தனமாக தோன்றலாம் ஆனால்  அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் என்னும் மற்றொரு விஞ்ஞானியின் ஆய்வகத்தில் உண்டான ஒரு தற்செயல் மாசுபாடு  பண்டைய மருத்துவர்களின் செயல்பாடுகளில் ஏதோ ஒன்று முக்கியமாக இருந்ததைக் காட்டியதோடு, அதுவரையிலும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் நோய் சிகிச்சைகளை அணுகிய முறையையும் மாற்றியது.

வேடிக்கையான பூஞ்சைச்சாறு

ஸ்காட்டிஷ் உயிரியலாளரான அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் நோய்த்தொற்றை  உருவாக்கும் பாக்டீரியாக்களை ஆய்வு செய்வதில் பெருவிருப்பம் கொண்டிருந்தார். ராணுவத்தில் பணிபுரிந்த அவர் முதல் உலகப்போரின்போது படைவீரர்கள் போர்க்காயங்களால் அல்லாது  காயங்களில் உண்டான பாக்டீரியா தொற்றுக்களால் உயிரிழந்ததை கண்டார் .பல ஆண்டுகள் அந்த நோய்த்தொற்றுக் காரணிகளான பாக்டீரியாக்களை அழிக்கும் மருந்தை கண்டுபிடுக்க ஆய்வுகளை அவர் மீள மீள செய்துகொண்டே இருந்தார். 

பல வருடங்கள் ஆய்வுக்கு பிறகும் மீண்டும் மீண்டும் பாக்டீரியாக்களை  கொல்லும் ஒரு பொருளுக்காக  முயற்சி செய்துகொண்டே இருந்த அவர், விடுப்பில் செல்ல முடிவு செய்தார்.ஆய்வகத்திலிருந்து செல்லும் முன்பு தவறுதலாக ஆய்வக மேசையில் பாக்டீரியாக்கள் வளர்ந்திருந்த ஒரு பெட்ரி தட்டை மட்டும் திறந்து  வைத்து விட்டிருந்தார்.

A petri dish with antibiotics
இந்த பாக்டீரியாக்கள் வளர்ந்துள்ள பெட்ரி தட்டுக்களில் காணப்படும் வெள்ளை சிறு வட்டங்கள் நுண்ணுயிர்க்கொல்லியொன்றினால் நனைக்கப்பட்டவை. மேலும் விவரங்களுக்கு சொடுக்குக.

விடுமுறைக்கு சென்றிருந்த அலெக்ஸாண்டர் ஆய்வகத்துக்கு திரும்பிய போது பாக்டீரியாக்கள் வளர்ந்திருந்த பெட்ரி தட்டுக்களில் நீலப்பச்சை பூஞ்சைகள் (ரொட்டிகளில் வளர்பவைகளைப்போல) வளர்ந்திருப்பதை கண்டார்.மேலும் பாக்டீரியாக்கள் அந்த பூஞ்சைகளின் அருகில் வளரவில்லை என்பதையும் அவர் கண்டார். ஏன் பாக்டீரியாக்கள் பூஞ்சைகளுக்கருகில் வளரவில்லை என்பதை சோதிக்க பூஞ்சைகளின் மாதிரிகளை எடுத்துக்கொள்ளும் முன்பு அவர் ’’என்ன பைத்தியக்காரத்தனம் இது’’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார். ஃப்ளெமிங் அந்த பூஞ்சை பெனிசிலியம் நொட்டேட்டம் என்பதையும் அதிலிருந்து உருவாகும் ஒன்று நோய்த்தொற்றை உருவாக்கும் அனைத்து பாக்டீரியாக்களையும் அழிப்பதையும் கண்டார்.அந்த பொருளுக்கு  அவர் பெனிசிலின் என்று பெயரிட்டார். பெனிசிலின் தான் உலகில் முதல் முதலாக ஒரு உயிரியிலிருந்து  உருவாக்கப்பட்டு, ஒரு விஞ்ஞானியால் விவரிக்கப்பட்ட முதல் நுண்ணுயிர்க்கொல்லி.

மருத்துவத்துறையில் பெரும் திருப்புமுனயாக அமைந்த நுண்ணுயிர்க்கொல்லியை இவ்வாறாக அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் கண்டுபிடித்தார். எனினும் அதன் பிறகு மேலும் பத்து ஆண்டுகள் ஆயின, அவருடன் இணைந்த இரண்டு விஞ்ஞானிகள் பெனிசிலியத்திலிருந்து தொற்றுக்களை குணமாக்கும் அளவிற்கு பெனிசிலினை  உருவாக்க.  அதிர்ஷ்ட வசமாக  அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் நுழைந்த அதே சமயத்தில் பெனிசிலினை  பெருமளவில் உருவாக்க முடிந்ததால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன

தொடர்ந்த தேடல்

இன்றும் பெனிசிலின் ஒரு சில சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றாலும் அது 1900ங்களில் இருந்தது போல இப்போது பாக்டீரியாக்களுக்கு எதிராக வீரியத்துடன் செயல்படுவதில்லை. இதற்குக் காரணம் பல பாக்டீரியாக்கள் பெனிசிலினுக்கு எதிர்ப்புத்திறன் பெற்றிருப்பதுதான். சொல்லப்போனால் பல பாக்டீரியாக்கள் பல விதமான நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்புதிறனை கொண்டிருக்கின்றன. இது நோயுற்றவர்களுக்கும் மருந்து தேவைப்படுவோருக்கும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.

Scraped knee

நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத் திறன் கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் உடலினுள் நுழைவதற்கு முழங்காலின் சிராய்ப்புக்களே கூட போதுமானது. சித்திரம்: saulhm.

எதிர்ப்புத்திறனை புரிந்து கொள்ள பின்வரும் காட்சியை கற்பனை செய்து கொள்ளலாம். இப்படி சொல்லலாம் நீங்கள் முழங்காலை சிராய்த்துக்கொண்டீர்கள், சிலநாட்களில் அந்த இடம் அதிகமாக வீங்கி சிவந்து அரிப்பும் வலியுமாக இருக்கிறது.உங்கள் நெருங்கிய நண்பர் உங்களை மருத்துவரிடம் செல்ல சொல்கிறார்.நீங்களும் அப்படியே செய்கிறீகள்.உங்கள் முழங்கால் சிராய்ப்பை பார்க்கும் மருத்துவர் உங்களுக்கு ஒரு சிறிய ஆரஞ்சு வண்ன பாட்டிலில் இருக்கும் நுண்ணுயிர்க்கொல்லியை நோய்த்தொற்றை தடுக்க கொடுக்கிறார்.

சரி இப்போது நீங்கள் ஒரு பாக்டீரியா என்று கற்பனை செய்துகொள்ளலாம். ஒரு நாள் நீங்கள் உங்களின் மற்ற பாக்டீரியா நண்பர்களுடன் ஒரு பூங்காவின் பெஞ்சில் இருக்கிறீர்கள் அப்போது யாரோ ஒருவர் அறியாமல் உங்கள் மீது தன் கையை வைத்து உங்களை கையில் எடுத்துக்கொண்டு தன் முழங்காலில் அப்போதுதான் உண்டாகி இருக்கும் ஒரு புதிய சிராய்ப்பின் அருகே தேய்க்கிறார்.உங்களுக்கான உணவு! நீங்கள் அனைவரும் அந்த காயத்தின் வழியே உடலுக்குள் நுழைந்து பல்கிப் பெருக துவங்குகிறீர்கள். வெகு விரைவிலேயே ஒரு சக்தி வாய்ந்த நுண்ணுயிர்க்கொல்லி  உங்கள் நண்பர்களை ஒவ்வொருவராய் அழிக்கத் துவங்குகிறது. அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு அந்த நுண்ணுயிர்க்கொல்லியை அழிக்கும் ஜீன் இருக்கிறது. மற்ற பாக்டீரியாக்கள் அழிந்துகொண்டிருக்கையில் நீங்கள் தப்பித்து உயிருடன் இருக்கிறீகள்.நீங்கள் வெற்றியாளர்.ஏனெனில் நீங்கள் மாத்திரமே தப்பித்திருக்கிறீர்கள்.நீங்கள் மட்டுமே இனி பல்கிப் பெருக முடியும். இனி இப்படி பல்கிப்பெருகிய உங்களின் அனைத்து உறவினர்களுக்குமே நுண்ணுயிர்க்கொல்லி எதிர்புத்திறன்  கொண்ட ஜீன் இருக்கும்.இப்போது அந்த முழங்கால் சிராய்ப்பில் இருக்கும் நோய்த்தொற்று நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட பாக்டீரியாக்களினால் உருவானது.

Pill bottle

பாக்டீரிய பரிணாம வளர்ச்சியானது நமது மருந்து  உருவாக்கும் செயல்பாட்டைக்காட்டிலும் மிக வேகமானது. நுண்னுயிர்க்கொல்லி உருவானதுமே  அந்த குறிப்பிட்ட நுண்ணுயிர்க்கொல்லிக்கு எதிர்ப்புத்திறன் கொண்டிருக்கும் பாக்டீரியாக்களும் உருவாகி விடுகின்றன.அதாவது அடுத்த முறை அதே நுண்னுயிர்க்கொல்லி அளிக்கப்டுகையில் அது பயனளிக்காது.  சித்திரம்: Mpelletier1

அதாவது அதே ஆரஞ்சு பாட்டிலில் இருக்கும் நுண்ணுயிர்க்கொல்லி அடுத்த முறை வேலை செய்யாது. அந்த புதிய எதிர்ப்புத்திறன் கொண்டிருக்கும் பாக்டீரியா தொற்றுக்கென.மருத்துவர் புதிதாக ஏதேனும் சிந்திக்கவேண்டும்

சுருங்கச் சொன்னால்

 

நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்திறன் ஒரு பாக்டீரியா அதைக்கொல்லும் திறன் கொண்ட நுண்ணுயிர்க்கொல்லிக்கு எதிரான ஜீனை பெற்றுக்கொள்கையில்  உருவாகிறது எனவே அதைக்கொல்ல வேண்டிய நுண்ணுயிர்க்கொல்லியிடமிருந்து அது தப்பி பிழைத்துவிடுகிறது. பாக்டீரியாக்களில் புதிய ஜீன்கள் பிறழ்வு மூலமாகவும் உருவாகும்.அல்லது அத்தகைய ஜீன்கள் கிடைமட்ட மரபணு பரிமற்றம் மூலமாக ஒரு பாக்டீரியாவிலிருந்து மற்றொரு பாக்டீரியாவிற்கு மாற்றப்படலாம்..இவ்வகையான பாக்டீரியாக்கள் பல்கிப்பெருகி பரவுகையில் பெரிய பிரச்சனையை உருவாக்கும் .ஏனெனில் பலர் நோயுறுவார்கள். இதுபோன்ற நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட பாக்டீரியா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் விதம் விதமான நுண்ணுயிர்க்கொல்லிகளை உபயோகிப்பார்கள் சிலசமயங்களில் அவை அனைத்தும் வேலைசெய்யாமல் போகக்கூடும்.அல்லது கடுமையான பக்க விளைவுகளை அவை உருவாக்கலாம்.


நுண்ணுயிர்க்கொல்லி vs பாக்டீரியா: ஒரு பரிணாம போர் ASU வின் பரிணாம மற்றும் மருந்துவ துறையினால் அளிக்கப்படுகிறது. பரிணாம மருத்த்வம் குறித்து மேலும் அறிந்துகொள்ளISEMPD.org

ஆசிரியரின் பெயரில் திருத்தங்கள் செய்யவேண்டி வரலாம்
https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

நூலியல் தகவல்கள்:

  • கட்டுரை: நுண்ணுயிர்க்கொல்லிகள் vs பாக்டீரியாக்கள்: ஒரு பரிணாமப் போர்
  • ஆசிரியர்: Dr. Biology
  • பதிப்பகத்தார்: Arizona State University School of Life Sciences Ask A Biologist
  • தளத்தின் பெயர்: ASU - Ask A Biologist
  • வெளியிடப்பட்ட தேதி: 16 Jun, 2022
  • அணுகிய தேதி:
  • இணைப்பு: https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

APA Style

Dr. Biology. (Thu, 06/16/2022 - 11:14). நுண்ணுயிர்க்கொல்லிகள் vs பாக்டீரியாக்கள்: ஒரு பரிணாமப் போர். ASU - Ask A Biologist. Retrieved from https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

American Psychological Association. For more info, see http://owl.english.purdue.edu/owl/resource/560/10/

Chicago Manual of Style

Dr. Biology. "நுண்ணுயிர்க்கொல்லிகள் vs பாக்டீரியாக்கள்: ஒரு பரிணாமப் போர்". ASU - Ask A Biologist. 16 Jun 2022. https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

MLA 2017 Style

Dr. Biology. "நுண்ணுயிர்க்கொல்லிகள் vs பாக்டீரியாக்கள்: ஒரு பரிணாமப் போர்". ASU - Ask A Biologist. 16 Jun 2022. ASU - Ask A Biologist, Web. https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Modern Language Association, 7th Ed. For more info, see http://owl.english.purdue.edu/owl/resource/747/08/
MRSA (மெத்திசிலின் எதிர்ப்புத்திறன் கொண்ட ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரியஸ்)
MRSA (மெத்திசிலின் எதிர்ப்புத்திறன் கொண்ட ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரியஸ்) இது அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு சுமார் 100,000 பேருக்கு நோய்த்தொற்றை உருவாக்கும் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட பாக்டீரியா.

Be Part of
Ask A Biologist

By volunteering, or simply sending us feedback on the site. Scientists, teachers, writers, illustrators, and translators are all important to the program. If you are interested in helping with the website we have a Volunteers page to get the process started.

Donate icon  Contribute

Share this page