மகரந்த தானியங்கள்

அறிந்துகொள்ளவேண்டிய சொற்களை காட்டு/மறை

அறிகுறிகள் (Symptom): 1. சுரமோ அலது தோல் தடிப்புகள் போன்ற நோய் இருக்கையில் நீங்கள் எவ்வாறு தோற்றமளிக்கிறீர்கள் 2. நோயுற்றிருக்கும் போது உங்கள் உடலில், நடவடைக்கைகளில் உண்டாகும் மாற்றங்கள்

எரிச்சலூட்டுவது (Irritant): நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை கொண்டு உடலை வினைபுரிய செய்பவை.

ஒவ்வாமை (Allergy): மகரந்தம், பூஞ்சை ஸ்போர்கள், தூசி போன்றவற்றிற்கான, தும்மல், அரிப்பு மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற உடலின் எதிர்வினைகள்.

ஏன் இது வைக்கோல் சுரம் எனப்படுகின்றது?

hay stacks

 

சிலருக்கு வேனிற்காலங்களில் ஜலதோஷம், கண் அரிப்பு மற்றும் தும்மல் ஆகியவை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகி விட்டிருக்கும். இந்த அறிகுறிகளுக்கு  காரணம் வைக்கோல் சுரம்.  வைக்கோல் சுரமென்றால் என்ன? அது உண்மையில் ஏராளம்  காகித கைக்குட்டைகளை எடுத்து செல்ல செய்கின்றதா?

வைக்கோல் சுரம் என்பது பொதுவாக வேனிற்காலத்தில் உண்டாவது. வேனிற்காலத்தில் தான் பல தாவரங்கள் மலர்ந்து வெளியேற்றும் ஏராளமான மகரந்தங்கள் காற்றில் கலந்து சிலருக்கு தும்மல், கண்களில் நீர் வடிதல் போன்ற ஒவ்வாமைகளை உண்டாக்குகின்றது

வைக்கோல் மக்களுக்கு   தும்மல் வரச் செய்கிறது – சரிதானே?

உண்மையில்  பிரச்சனை வைக்கோல் அல்ல. பல தாவரங்களின் மகரந்த துகள் களும், பூஞ்சைகளின் ஸ்போர்களும், தூசித்துகள்களுமே ஒவ்வாமையை உண்டாக்குகின்றன. வைக்கோல் இதில் இடைப்பட்டு எப்படி கெட்ட பெயர் வாங்கியது என்றால் தாவரங்கள் மும்முரமாக மகரந்தங்களை உருவாக்கும் அதே காலத்தில்தான் தானியங்கள் அறுவடை செய்யப்பட்டு வைக்கோல்களும் சேகரிக்கப்படுகின்றன. வைக்கோல் சேகரிக்கப்படும் பருவத்தில் தும்மலும் ஒவ்வாமையும் இருப்பதால் மக்கள் இந்த சங்கடத்துடன் வைக்கோலின் பெயரை இணைத்து விட்டனர். எனவேதான் வைக்கோல் சுரம் இப்போது நம் அகராதிகளில் இடம் பெற்றிருக்கிறது.

எனவே எந்தெந்த தாவரங்கள் மனிதர்களுக்கு ஒவ்வாமை பிரச்சனைகளை அதிகம் உருவாக்குகின்றன?

ஒவ்வாமைக்கு பல காரணங்கள் இருப்பினும் அவற்றில் மிக முக்கியமான பங்களிப்பை கொண்டிருக்கும் தாவரங்கள் சிலவற்றை பார்க்கலாம்.*

மலர்களும் மூலிகைகளும்

சிறு கீரை (பன்றிக்களை). சீமை சாமந்தி, சாமந்தி, டெய்ஸி, பொன் தண்டு மலர்ச்செடி ,சூரியகாந்தி

புல் வகைகள்

அருகு,  கோல் புல், கருப்பன் புல், காக்கா கால் புல், இங்கிலீஷ் புல், செங்கொடி புல், கடற்கரை  புல், சர்க்கரை புல், தீவன புல்

மரங்கள்

பூச்ச மரம், சாம்பல்(ஆண்) காட்டரசு (ஆண்), பீச், பிர்ச், பெட்டி எல்டர்,(ஆண்), தேவதாரு, (ஆண்), நெலிங்கம் (ஆண்), ஆயா மரம், பேக்கான் சிவப்பு மற்றும் வெள்ளி மேப்பிள்ளை, (ஆண்),  முசுக்கொட்டை (ஆண்),கருவாலி,இடலை மரம் பனை  (ஆண்),அமெரிக்க வாதுமை,பைன், நெட்டிலிங்க மர வகை, (ஆண்), காட்டத்தி, அக்ரூட் , வில்லோ மரம் (ஆண்).

களைகள்

ஒட்டுக்களை. மேற்கத்திய களைப்பூண்டு, ருஷ்ய முள் பூண்டு, வட அமெரிக்க களைப்பூண்டு


* உதவிய குறிப்புகள்:

WebMD's Worst and Best Flowers for People with Allergies

 தும்மல்
ஒரு மனிதன் வாயை திறந்து தும்முகையில் நீர்த்திவலைகள் வெளியாகிறது. தும்முகையில் அல்லது இருமுகையில் வாயை கட்டாயமாக மூடிக் கொண்டிருப்பதன் மூலம் பிறரையும் பாதுகாப்பதன் அவசியத்தை இந்த புகைப்படம் காண்பிக்கிறது.

Be Part of
Ask A Biologist

By volunteering, or simply sending us feedback on the site. Scientists, teachers, writers, illustrators, and translators are all important to the program. If you are interested in helping with the website we have a Volunteers page to get the process started.

Donate icon  Contribute

 

Share to Google Classroom