மகரந்த தானியங்கள்

அறிந்துகொள்ளவேண்டிய சொற்களை காட்டு/மறை

ஆதாரம்/சாட்சி/சான்று (Evidence): உடைக்கப்பட்ட ஒரு கதவு அங்கே கொள்ளை நடந்தற்கு சான்றாக இருப்பதுபோல, தீர்ப்பளிப்பதற்கு முடிவெடுப்பதற்கு உதவும் விஷயங்கள் அல்லது பொருட்கள்.

ஆல்பைன் (Alpine): உயர்ந்த மலைப்பகுதிகளில்.

ஊசியிலை மரங்கள் (Conifers): பைன் மரங்களை போல ஊசிகளை போன்ற இலைகளை கொண்டிருக்கும் பசுமை மாறா மரங்களும் புதர்களும்.

குடிமுறை வழக்கு (Civil case): நீதிமன்ற வழக்குகளில் குற்றத்தொடர்புடையதல்லாத விவாகரத்து, சொத்துரிமை மற்றும் தொழில் ரீதியான வழக்குகள்.

மகரந்த வடிவங்கள் (Palynomorph): மகரந்தம் மற்றும் சிதல் விதை போன்ற நுண்ணோக்கியால் மட்டும் மகரந்த ஆய்வளர்கள் காண்பவை.

police tape

 

குற்ற விசாரணையில் மகரந்தங்கள்

மகரந்தங்களின் உதவியால் குற்றங்களை  முதன் முதலில் கண்டுபிடித்து சுமார் 50 வருடங்கள்  ஆகின்றன சட்ட  அமலாக்கம் மற்றும் சட்டத்துறை  தடயவியலில் மகரந்தங்களின் உதவியை அறிந்துகொள்ள இத்தனை காலம் தேவைப்ட்டிருந்திருக்கின்றது.மகரந்தங்களின் உதவிகொண்டு தீர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மகரந்தங்கள் தடயவியல் உபயோகங்களும் அதிகரித்து வருகின்றன.

மகரந்த தடயவியல் உதவியால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குற்ற வழக்குகளில்  சிதல்விதைகளையும் மகரந்தங்களையும் கொண்டு பல்வேறு வழக்குகள் கண்டுபிடிக்க பட்டிருப்பது தெரியவந்து

அவற்றைக் குறித்து ஒரு சிறு பட்டியல்:

 • போலி ஆவணங்கள்
 • சட்டவிரோதமாக போதைபொருட்களை வைத்ருதித்தலும், விற்பனையும்
 • தாக்குதல்
 • திருட்டு
 • கற்பழிப்பு
 • கொலை
 • இனப்படுகொலை
 • பயங்கரவாதம்
 • எரியூட்டல்
 • சாலை விபத்து குற்றங்கள்
 • கள்ள நோட்டு அச்சடித்தல்
 • வயாகரா போன்ற  விலை உயர்ந்த மருந்துகளின் போலிகளை கண்டறிவது

மகாந்தங்களையும் சிதல்விதைகலையும் கொண்டு பலவகையான குடியுரிமை வழக்குகளும் கூட தீர்க்கப்பட்டு இருக்கின்றன.பல வகைகளில் மகரந்தங்கள் வழக்குகளில் சான்றாக இருந்துள்ளன. கீழ்க்கணும் பட்டியலில் மகரந்தங்களும், சிதல்விதைகளும் சான்றாக இருந்து தீர்க்கபட்ட வழக்குகளின் பட்டியலை காணலாம்.

 • போலி ஆவணங்கள்
 • போலி புராதனப் பொருட்கள்
 • புகழ்பெற்ற கலைஞர்களின் ஓவியங்களை அங்கீகரித்தல்
 • வரலாற்று தலங்கள் மற்றும் தொல்பொருளியல் இடங்களிலிருந்து கலைப் பொருட்களை அகற்றுதல்
 • சட்டவிரோத மீன் பிடித்தலும், விலங்கு வேட்டையும்
 • சட்டவிரோத சூழல் மாசு
Pollen grains shapes and sizes

 

மகரந்தங்களை எவ்வாறு வேறுபடுத்துவது?

குற்றப்புலனாய்வில் மகரந்தங்களை வெற்றிகரமாக பயன்படுத்துவது என்பது ஒரு மகரந்த ஆய்வாளரின் அனுபவம் மற்றும் அறிவை பொருத்தது.

ஏறக்குறைய ஐந்து லட்சம் மகரந்தம் மற்றும் சிதல்விதைகளின் வகைகளில் ஒவ்வொன்றையும் மற்றொன்றிலிருந்து வேறுபடுத்த ஏராளமான அனுபவம் தேவைப்படும். 

மகரந்தங்கள் கிடைக்கப்பெற்ற குற்றம் நடந்த இடத்தில் தாவர சூழல் மற்றும் தாவர வகைகளை குறித்து ஒருவருக்கு மிகச் சிறந்த ஆழமான அறிவு அவசியமாக  தேவைப்படுகிறது.

மகரந்தங்களின் தோற்றம், பரவல், சேமிப்பு மற்றும் வகைப்படுத்துதல் ஆகியவை அடங்கிய மகரந்த அறிவியலில்,  முழுமையான அறிவு இருந்தால் மட்டுமே தடயவியலில் மகரந்தங்களை கொண்டு ஆதாரங்களை கண்டறிய முடியும்.

பெரும்பாலான தடயவியல் ஆதாரங்களைப் போலவேஇதிலும் நேரம் முக்கியமானது. ஒரு குற்ற காட்சியை விசாரிக்க மகரந்த ஆய்வாளர் எவ்வளவு சீக்கிரம் அழைக்கப்படுகிறாரோ, எவ்வளவு தரமான மாதிரிகள் சேகரிக்கப்படும்.

ஏனெனில் மகரந்தம் மற்றும் வித்துக்கள்  மிகச்சிறியவை, எடையற்றவை மேலும், எளிதில் மறுசுழற்சி செய்யப்படுபவை. இவை வளிமண்டலத்தில் ஏராளமான அளவுகளில் இருப்பதால், ஒரு குற்றக்காட்சி விரைவில் மறுசுழற்சி செய்யப்பட்ட  மகரந்த துகள்களால்  மாசுபடலாம்

தடயவியல் சோதனைகளுக்கு விரைவாகவும் முறையாகவும் சேகரிக்கப்படா விட்டால் ,இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட மகரந்த துகள்கள் குற்றம் நடந்த இடத்தின் பணியாற்றும் புலனாய்வாளர்களின் ஆடை அல்லது காலணிகளில் ஒட்டியிருந்து அந்த குற்றப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு சூழலை மாசுபடுத்திவிடும், குற்றம்  நடந்திருக்காத இடங்களிலிருந்து  அல்லது வளிமண்டலத்திலிருந்து கூட குற்றம் நடந்த இடங்களில் வந்து  மகாந்தங்கள் படிந்துவிடலாம்.

சூழ்நிலைகள் சரியானதாக இருந்தால், மகரந்த மாதிரிகள் சரியான மற்றும் சரியான நேரத்தில் சேகரிக்கப்பட்டால், ஒரு குற்றம் நடந்த ஆண்டின் நேரத்தை கூட சொல்ல முடியும்.

சில வழக்குகளில்  எத்தனை  காலத்துக்கு முன்னால் குற்றம் நடந்திருக்கிறது  என்று கூட ஒருவர்  சொல்ல முடியும்.

இதுபோன்ற முக்கிய தகவல்களையெல்லாம் பல்வேறு தாவரங்களின் மகரந்த சுழற்சிகளை அறிந்திருப்பதன் மூலமும், செல்லுலோஸால் உருவாகி இருக்கும் மகரந்தங்களின் உட்சுவரான இண்டைனை சோதிப்பதன்  மூலமும் அறியமுடியும்.

மகரந்தங்களின் பரவல் துவங்கியதிலிருந்து இந்த மகரந்த உட்சுவரான இண்டைன் சேதமடைய துவங்கும் எனவே இதை அடிப்படையாக கொண்டே குற்றம் நடந்த காலத்தை சரியாக கணிக்க முடியும்.

Pollen grains shapes and sizes

 

மகரந்த தடயவியலின்  இரு வழக்குகள்

கப்பலில் கடத்தி வரப்பட்ட 500 கிராம் கொக்கெய்ன் ஹைட்ரோகுளோரைடு என்னும் போதைப்பொருள் நியூயார்க்கில் ஒரு திடீர் சோதனையில் பிடிபட்டது தான் முதல் வழக்கு. பிடிபட்ட கொகெய்னில் ஒரு சிறு பகுதி மகரந்த தடயவியல் ஆய்வகத்துக்கு  சோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதற்கு முன்னர் நியூசிலாந்திலிருந்து கைப்பற்றிய சட்டவிரோதமாக  விற்பனைக்கு செய்யவிருந்த கஞ்சாவை சோதனை செய்ததில் இரண்டு முக்கிய தடயங்கள் கிடைத்தன.. ஒன்று, கிடைத்த மாதிரி கஞ்சாவில் , கஞ்சா செடியின் மகரந்தங்கள் மட்டுமல்லாது ஆசியாவில் வாழும் பிற தாவரங்களின் மகரந்தங்களும் இருந்தன. எனவே இவை நியூசிலாந்தில்  வளர்ந்த கஞ்சா செடிகள் அல்ல என்பதை உறுதிசெய்ய முடிந்தது. 

இரண்டாவதாக, நியூசிலாந்தில் அப்போது கிடைத்த கஞ்சாவிலும்   முன்னர் பல சோதனைகளில் கைப்பற்றப்பட்ட  கஞ்சாவில் இருந்த மகரந்தங்களுக்கும் ஒரே மாதிரியான மகரந்த சுவடுகள் இருந்தன.   எனவே இதிலிருந்து சட்டவிரோதமாக நியூசிலாந்தில் கிடைத்த அனைத்து கஞ்சா பொருட்களும் ஒரே பெரிய கப்பலில்  இருந்தே வந்திருக்கும் என முடிவுக்கு வர முடிதந்து.மேலும் கடத்தப்பட்ட கஞ்சா ஒற்றை வலைப்பின்னலில் விநியோகிக்கப்பட்டது என்பதையும் முடிவுகள் தெரிவித்தன.

நியூயார்க்கில் கைப்பற்றப்பட்ட கொகெயினுக்கும் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டன.மகரந்த தடயவியல் ஆய்வகத்தில்   கொகெயினில் கலந்திருந்த மகரந்தங்களை  சோதனைக்குள்ளாக்கிய போது மூன்று முக்கிய முடிவுகள் கிடைத்தன. 

முதலாவதாக, இந்த கொகெய்ன் மாதிரிகளில் இருந்த மகரந்தங்கள்   வணிக ரீதியாக கோகோ செடிகள் வளர்க்க படும் பொலிவிய மற்றும் கொலம்பியாவில் மட்டுமே வளரும் வெப்பமண்டல தாவரங்களிலிருந்து உருவானவஇந்த முடிவு  கைப்பற்றப்பட்ட கொகெய்ன்  வெப்பமண்டல தென் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கலாம் என்று தெரிவித்தது. ஆய்வில் கிடைத்த இரண்டாவது தொகுப்பு மகரந்தங்கள்  சப்- ஆல்பைன் எனப்படும் மலையுச்சிபிரதேசங்களின் ஊசியிலை மரங்களான கனடா ஹெம்லாக் (Tsuga canadensis)  மற்றும் ஜேக் பைன்(Pinus banksiana) ஆகியவற்றிலிருந்து உருவானவை. இந்த இரண்டு வகை ஊசியிலை மரங்களும் பொதுவாக ஒரே பகுதியில் வளர்வதில்லை, ஆனால் கிழக்கு கனடா மற்றும் வடகிழக்கு அமெரிக்காவின் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் இவையிரண்டும் சேர்ந்து  வளர்கின்றன. எனவே, ஒரே கொகெயின் மாதிரியில் இந்த ஊசியிலை வகைகளில் இரண்டிலிருந்தும் மகரந்தம் இருப்பதுகைப்பற்றப்பட்ட கொகெயின் தென் அமெரிக்காவில் இருந்து வட அமெரிக்காவுக்கு அல்லது கிழக்கு கனடாவின் சில பகுதிகளுக்கு மற்றும் வடகிழக்கு அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டது என்பதைக் காட்டியது. 

கப்பலில் கடத்தி வரப்பட்டபோது வட அமெரிக்க பகுதியில் அந்த  கப்பலின் பெட்டிகள் வெளிப்படையாக திறக்கப்பட்டு, போதைபொருளின் சந்தை மதிப்பை அதிகரிப்பதற்காக கொகெயினுடன் சர்க்கரைத்தூள் சேர்க்கப்பட்டபோது வெளிக்காற்றிலிருந்து கோகெய்னுடன் மகரந்தங்களும் கலந்திருக்கலாம் என்று கருதப்பட்டது..இந்த போலி கலப்படம் வடமெரிக்காவை தவிர  வேறு எந்தப் பகுதியிலும் ஏற்பட்டிருந்தாலும், ஊசியிலை மாங்களின் மகரந்த வகைகள் இரண்டும் ஒரே கோகோயின் மாதிரியில் இருந்திருக்காது.

இறுதியாக, கோகோயினில் காணப்பட்ட மீதமுள்ள மகரந்தங்கள் பொதுவாக நியூயார்க் நகரத்தின் நகர்ப்புற சேரிகளில் காலியாக உள்ள இடங்களில் வளரும் களைத்தாவரங்களை சேர்ந்தவை  என்று அடையாளம் காணப்பட்டது.( சூரியகாந்தி செடி, புற்கள், பிர்ச், வாத்துக்கால் களை மற்றும் பன்றிக்களை போன்றவை).

எனவே கொகெய்ன் நியூயார்க் நகரத்தை அடைந்தபோது, தெருவில் விநியோக்கப்படுவதற்காக பொட்டலங்கள்  மீண்டும் திறக்கப்பட்டு மேலும் கலப்படம் செய்யபட்டிருக்கலாமென்று சந்தேகிக்கப்பட்டது.அந்த சந்தர்ப்பத்தில்தான்.காற்றில் பரவும் மகரந்தங்கள் கொகெயினில் கலந்திருந்து பின்னர், ஆய்வக சோதனையில் வெளிப்பட்டிருக்கும்.

ஆங்கிலத்தில் மர்ம புத்தக அட்டை

கடந்த காலத்தில் கண்டுபிடிக்க முடியாத, மற்றும் தற்போதைய நவீன குற்றவியல் விசாரணைகள் மகரந்தங்களை குற்றங்களை கண்டறிய பயன்படுத்துகின்றன

Be Part of
Ask A Biologist

By volunteering, or simply sending us feedback on the site. Scientists, teachers, writers, illustrators, and translators are all important to the program. If you are interested in helping with the website we have a Volunteers page to get the process started.

Donate icon  Contribute

 

Share to Google Classroom