ஒளிச்சேர்க்கை கதை
எழுதியவர்: Heather Kropp, Angela Halasey
படங்கள்: Angela Halasey
மொழியாக்கம்: முனைவர் லோகமாதேவி

அறிந்துகொள்ளவேண்டிய சொற்களை காட்டு/மறை

ஒளிச்சேர்க்கை (Photosynthesis): தாவரங்கள் பசுங்கனிகத்தின் உதவியுடன் சூரிய ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றி, மாவுச்சத்துக்களான தரசத்தை (ஸ்டார்ச்) உருவாகும் தொடர் நிகழ்வுகள்.

கரியமில வாயு (Carbon dioxide): இரண்டு ஆக்ஸிஜன்மற்றும் ஒரு கார்பன் அணுக்களை கொண்டவேதிப்பொருள்.(CO2)

நிறமி (Pigment): சூரிய ஒளியின் சில நிறங்களை பிரதிபலித்தும், சில குறிப்பிட்ட நிறங்களை மட்டும் ஈர்த்தும், தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பிற பொருட்களுக்கும் நிறமளிக்கும் இயற்கையான வேதிப்பொருள்.

பசுங்கனிகம் (Chloroplast): சூரியஒளி ஆற்றலை தாவரங்கள் உபயோகப்படுத்தும் வகையிலான ஆற்றலாக (சர்க்கரை) மாற்றுகின்ற தாவரங்களின் ஒரு பகுதி. கீழ்நிலைத்தாவரங்களான பாசிகளும் பசுங்கனிகங்களை கொண்டிருக்கின்றன.

பச்சையம் (Chlorophyll): தாவரங்களுக்கு பச்சை நிறம் அளிக்கும் நிறமி.

தமக்கான உணவை தாமே தயாரிக்கும் தாவரங்கள்

Venus fly trap

வீனஸ் பூச்சிஉண்ணும் தாவரம் . (Dionaea muscipula) மேலும் விவரங்களுக்கு சொடுக்குக.

தாவரங்களும் நம்மைப்போலவே உணவுண்ணுமா?

ஆம் ஆனால் நம்மைப் போல சமையலறையில் பொருட்களை வாங்கி வந்து சமைப்பது அலல்து உணவு விடுதிக்கு சென்று அவை உணவுட்கொள்ளுவதில்லை
மாறாக ஒளிச்சேர்க்கையின் மூலம் அவை உணவை தயாரித்து உண்ணுகின்றன

Photosynthesis என்னும் சொல்லின் photo என்பது ஒளியையும் synthesis என்பது தயாரித்தல் என்பதையும் குறிக்கின்றன.  இச்சொல் அளிக்கும் பொருளிலிருந்தே  தாவரங்கள் எவ்வாறு ஒளியை பயன்படுத்தி உணவை தயரிக்கின்றன என்று  அறிந்துகொள்ளலாம் 

ஒளியிலிருந்து பெறப்படுபவை

விலங்குகளைப்போலவே தாவரங்களுக்கும் ஆற்றல் தேவையாயிருக்கின்றது. மனிதர்களும் பிற விலங்குகளும் உணவை உண்ணுவதன் மூலம் ஆற்றலைப்பெறூகின்றனர். நமது ஒருநாளைய உணவில் தானியங்கள், சாலட்கள், மீன் ஆகியவை அடங்கி இருக்கும். இவற்றோடு நாம் அருந்தும் பானங்களும் நமக்கு ஆற்றலளிக்கின்றன.

Basics of plant life

சர்க்கரையை உருவாக்கும் தாவரங்கள் தங்களின் வளர்ச்சிக்கு தேவையான்வற்றை எங்கிருந்து பெறுகின்றன? ஒளிச்சேர்க்கை குறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்

தாவரங்கள் உணவை உன்ணுவதில்லை மாறாக சூரிய ஒளியிலிருந்தோ அல்லது பிற ஒளியிலிருந்தோ ஆற்றலை எடுத்துக்கொண்டு  தண்ணீர், காற்று, ஒளி ஆகியவற்றைகொண்டு உணவை தயாரிக்கின்றன.காற்றிலிருந்து தாவரங்கள் கரியமில வாயுவை மட்டும் எடுத்துக்கொண்டு பிராணவாயுவான் ஆக்ஸிஜனை ஒளிச்சேர்க்கையின் போது வெளிவிடுகின்றன.

தாவரங்கள் ஒளிச்சேர்க்கையை என்னும் செயலை  சர்க்கரையை உருவாக்கப் பயன்படுத்துகின்றன. எப்படி மனிதர்களுக்கு சர்க்கரையை உண்ணுவது வேலைசெய்யவும் விளையாடவும் தேவையான ஆற்றலை அளிக்கிறதோ, அப்படியே தாவரஙகளின் வளர்ச்சிக்கும் சர்க்கரை இன்றீயமையாதது 

ஒளியைஉண்ணுதல்

Photosynthesis என்னும் சொல்லின் இரு பகுதிகளைபோலவே ஒளிச்சேர்க்கையும் இரண்டு பகுதிகளாக  நிகழும்.  ஒளியை சார்ந்திருக்கும் முதல் பகுதியில் சூரியஒளியாற்றல் பிற ஆற்றல் வடிவங்களுக்கு மாற்றப்படும். கால்வின் சுழற்சி எனப்படும் இரண்டாம் பகுதியில் காற்றின் கரியமில வாயு, ஒளியை சார்ந்திருக்கும் முதல் பகுதியின் ஆற்றல் ஆகியவற்றைக்கொண்டு சர்க்கரை அதாவது க்ளுக்கோஸ் தயாரிக்கப்படும். (கிரேக்க மொழியில் gleukos என்றால் இனிப்பு

செயல்நடைபெறும்இடம்

Green plant

ஏன் பெரும்பாலான தாவரங்கள் பசுமையாக உள்ளன? மேலும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்

தாவரச்செல்களினுள்ளே இருக்கும் பசுங்கனிகம் என்னும் சிறு தொழிற்சாலைகளில்தான் ஒளிச்சேர்க்கையின் இந்த இரண்டு பகுதிகளுமே நடைபெறும். இந்த பசுங்கனிகத்தில்தான்  இலைகளுக்கும் தண்டுகளுக்கும் பச்சைநிறமளிக்கும் பச்சையம் என்னும் நிறமி உருவாக்கப்படுகின்றது. பச்சை நிறமளிபப்தோடு இந்த நிறமி ஒளிச்சேர்க்கை நடைபெறவும் காரணமாயிருக்கின்றது

தாவரங்கள்சுவாசிக்குமா?

நாம் சுவாசிக்கும் பிராணவாயு (ஆக்ஸிஜன்) ஒளிச்சேர்க்கையின் போது உருவாகும் ஒரு வாயு.நாம் சுவாசிக்கையில் வெளியிடும் கரியமில வாயுவை தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது உபயோகப்படுத்திக்கொள்கின்றன

stomata

தாவரத்தின் இந்த நெருக்கமான தோற்றத்தைக்காட்டும் புகைப்படம், சிவப்பு மற்றும் பச்சை தாவர செல்களால் சூழப்பட்ட பிரகாசமான பச்சை நிற ஸ்டோமாட்டா என்னும் இலைத்துவாரங்களைவைக் காட்டுகிறது. மேலும் விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும்

திறந்திருக்கும் இலைத்துவாரங்கள் தாவரங்களில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான நீர் ஆவியாக  வெளியேற உதவுகின்றது.மிக அதிகமாக நீர் வெளியேறுகையில் இலைத்துவாரங்கள் மூடிக்கொள்ளும். தாவரங்கள் சர்க்கரையை உடைத்து ஆற்றலாக மாற்றுவதற்கும் பிராணவாயுவை உபயோகிக்கும்.

Respiration எனும் சொல்லின் res என்பதற்கு ’மீண்டும்’  எனவும் ‘spirare’ என்பதற்கு சுவாத்தல் எனவும்  லத்தீன் மொழியில் பொருள் . எல்லா உயிர்னங்களுக்கும் சுவாசித்தல் பொதுவானது ஆனால் தாவரங்களும் பாசிகளும் சில பேக்டீரியாக்களும் தன் சுவாசித்தலுடன் ஒளிச்சேர்க்கையும் செய்கின்றன

நம் உடலின் கார்பன்கள் தாவர ஒளிச்சேர்கையிலிருந்து பெறப்பட்டவையே. நாம் உண்ணும் உணவுகளை நினைத்துப்பாருங்கள். அவை தாவர உணவுகளாகவோ அல்லது தாவரங்களை உண்ணும் விலங்குகளுடையதாகவோ இருக்கும். நம் உடலின் கார்பன்கள் பிற உயிர்களிடமிருந்து பெறப்படுவதால்தான் நாம் நுகர்வோர்  அல்லது சார்பூட்ட உயிரி ( heterotrophs ) எனப்படுகின்றோம். ( கிரேக்க மொழியில் heteros என்றால் பிற வகைகள் என்றும்  trophos  என்றால் உண்ணுதல் என்றும் பொருள் அதாவது கார்பனை பிறவற்றிலிருந்து பெறுவது. 

கரியமில வாயுவே தாவரங்களின் கார்பன்.  கரியமில  வாயிவிலிருந்து பெறப்படுகின்றதால் தாவரங்களை நாம் காற்றிலிருந்து உருவானவை என்று கூட அழைக்கலாம்!


புகைப்படங்கள் ; Wikimedia Commons நிலப்பச்சை பேக்டீரியா புகைப்படம்; BASF - The Chemical Company.

மேலும் அறிந்து கொள்ள: ஒளியை உண்ணுதல்

மேற்கோளை காண

ஆசிரியரின் பெயரில் திருத்தங்கள் செய்யவேண்டி வரலாம்

நூலியல் தகவல்கள்:

  • கட்டுரை: ஒளியை உண்ணுதல்
  • ஆசிரியர்: Heather Kropp, Angela Halasey
  • : முனைவர் லோகமாதேவி
  • பதிப்பகத்தார்: Arizona State University School of Life Sciences Ask A Biologist
  • தளத்தின் பெயர்: ASU - Ask A Biologist
  • வெளியிடப்பட்ட தேதி: March 11, 2021
  • அணுகிய தேதி: July 15, 2024
  • இணைப்பு: https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

APA Style

Heather Kropp, Angela Halasey. (2021, March 11). ஒளியை உண்ணுதல், (முனைவர் லோகமாதேவி, Trans.). ASU - Ask A Biologist. Retrieved July 15, 2024 from https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

American Psychological Association. For more info, see http://owl.english.purdue.edu/owl/resource/560/10/

Chicago Manual of Style

Heather Kropp, Angela Halasey. "ஒளியை உண்ணுதல்", Translated by முனைவர் லோகமாதேவி. ASU - Ask A Biologist. 11 March, 2021. https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

MLA 2017 Style

Heather Kropp, Angela Halasey. "ஒளியை உண்ணுதல்", Trans. முனைவர் லோகமாதேவி. ASU - Ask A Biologist. 11 Mar 2021. ASU - Ask A Biologist, Web. 15 Jul 2024. https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Modern Language Association, 7th Ed. For more info, see http://owl.english.purdue.edu/owl/resource/747/08/
சயனோபாக்டீரியா

தாவரங்களைப்போலவே பெரும்பாலான பாசிகளும் நீலபச்சைப்பாசிகள எனபப்டும் நீலப்பச்சை பேக்டீரியாக்களும் ஒளிச்சேர்க்கை செய்கின்றன.

English version:

Be Part of
Ask A Biologist

By volunteering, or simply sending us feedback on the site. Scientists, teachers, writers, illustrators, and translators are all important to the program. If you are interested in helping with the website we have a Volunteers page to get the process started.

Donate icon  Contribute

Share this page:

 

Share to Google Classroom