ஒளிச்சேர்க்கை கதை

அறிந்துகொள்ளவேண்டிய சொற்களை காட்டு/மறை

ஆக்ஸிஜன் (Oxygen): சுமார் 21% காற்றை உருவாக்கும் மற்றும் பல உயிரினங்கள் வாழ வேண்டிய ஒரு வாயு

உறுப்பு (Element): வேதியியலில் ஒரு வேதியியல் செயல்முறையால் உடைக்க முடியாத (பிரிக்கப்படாத) ஒரு பொருள்.

ஒளிச்சேர்க்கை (Photosynthesis): தாவரங்கள் பசுங்கனிகத்தின் உதவியுடன் சூரிய ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றி, மாவுச்சத்துக்களான தரசத்தை (ஸ்டார்ச்) உருவாகும் தொடர் நிகழ்வுகள்.

கரியமில வாயு (Carbon dioxide): இரண்டு ஆக்ஸிஜன்மற்றும் ஒரு கார்பன் அணுக்களை கொண்டவேதிப்பொருள்.(CO2)

நிறை (Mass): ஒரு பொருளில் எவ்வளவு விஷயம் இருக்கிறது என்பதை விவரிக்க பயன்படுகிறது. அணுக்களின் எண்ணிக்கை, அணுக்களின் அடர்த்தி மற்றும் ஒரு பொருளில் எந்த வகையான அணுக்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரிந்தால் அதன் நிறையை கணக்கிடலாம்.

பசுங்கனிகம் (Chloroplast): சூரியஒளி ஆற்றலை தாவரங்கள் உபயோகப்படுத்தும் வகையிலான ஆற்றலாக (சர்க்கரை) மாற்றுகின்ற தாவரங்களின் ஒரு பகுதி. கீழ்நிலைத்தாவரங்களான பாசிகளும் பசுங்கனிகங்களை கொண்டிருக்கின்றன.

பச்சையம் (Chlorophyll): தாவரங்களுக்கு பச்சை நிறம் அளிக்கும் நிறமி.

தாவரங்களின் உடல் நிறை எங்கிருந்து  வருகின்றது?

எப்போதாவது தாவரங்களின் உடல் நிறை எவ்வாறூ வந்திருக்குமென்றூ எண்ணீ வியந்திருக்கிறீகளா? இத்தனை இலைகலும் கிளைகலும் நிச்சயம் எங்கிருந்தோவந்திருகவேண்டுமல்லவா அஎனில் எங்கிருந்து? தாவ்ர வளர்ச்சிக்கு முக்கியமானதாக் இருக்கும் நீர் காற்று மற்றூம் ஆற்றல் ஆகியவற்றிலிருந்தே இது கிடைக்கிறது

Water, Air (CO2), energy are needed for plant mass.

தாவரங்கள் எங்கிருந்து நிறையை பெறுகின்றன?

 காற்றின்கதை

carbon dioxide

கரியமிலவாயு  மூலக்கூறானது ஒரு கார்பன் மற்றும் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களால் ஆனது.

நம்மைச்சுற்றி இருக்கும் காற்றென்பது வெற்றிடம் போல  தெரியும் ஆனால் அப்படியல்ல!

காற்றென்பது மிகச்சிறிய மூலக்கூறுகளால் ஆனது. நமக்கு காற்றின் மூலக்கூறுகளை எடைபோடக்கூட முடியும்.

காற்றின் இரு மூலக்கூறூகள் ஆக்ஸிஜனும் கரியமில வாயுவும். நீங்கள் நினைக்கலம் நாம் உயிர்வாழ மிக அத்யாவசியமானது ஆக்ஸிஜன்தான் என்று, ஆனால் கார்பனும் மிக முக்கியம்.உலகின் அனைத்து உயிர்களுமே கார்பனால் ஆனவைதான்.

நம் உடலிலிருந்து மொத்த நீரையும் வெளியேற்றினால் எஞ்சி இருக்கும் உடலெடை முழுக்க கார்பன்தான்.இப்படித்தான் தாவரங்களுக்கும்.

soil sun and water

தாவரங்கள் இவை எவற்றிலிருந்தும் கார்பனை பெறுவதில்லை.

நமக்கு தேவையான கார்பன் நாம் உண்ணூம் உணவிலிருந்து கிடைக்கின்றது. ஆனால் தாவரங்களுக்கு எங்கிருந்து இந்த கார்பன் கிடைக்கின்றது? அவற்றிற்கு மண்ணிலிருந்தோ சூரியனிலிருந்தோ அல்லது நீரிலிருந்தோ கார்பன் கிடைப்பதில்லை.

தாவரங்கள் காற்றிலிருந்து கார்பனை எடுத்துக்கொள்ளூகின்றன.

தாவரங்கள்காற்றிலிருந்தாஉருவாக்கப்படுகின்றன?

Inputs for photosynthesis

தாவரங்கள் ஆற்றலை சூரியனிலிருந்தும், நீரை மண்ணிலிருந்தும் கார்பனை காற்றிலிருந்தும் பெறூகின்றன.

காற்றானது நைட்ரஜன் ஆக்ஸிஜன் மற்றூம் கரியமில வாயுக்களால் ஆனது. அப்படியானால் எவ்வ்வாறு தாவர்னக்கள் தமது வளர்ச்சிக்கு தேவையான கார்பனை பெறுகின்றன?. இந்த கார்பனே தாவர உடலின் பெரும்பாலான பாகங்களை கட்டமைத்து இலைகளையும் தண்டுகளையும் வேர்களையும் உருவாக்க உதவுகின்றது.

குளுக்கோஸ் மூலக்கூறுகளை கட்டமைக்க உபயோகமாகும் ஆக்ஸிஜனும் கரியமில வாயுவில் இருந்து தான் கிடைக்கிறது

நீரென்பது தாவரங்களின் வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது ஆகும். நீரானது இரண்டு ஹைட்ரஜன் மற்றும் ஒரு ஆக்ஸிஜன் அணுக்களால் ஆனது.

வேர்களின் வழியே உறிஞ்சும் நீரிலிருந்தே தாவரங்கள் தமக்கு தேவையான ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் பெற்றுவிடுகின்றன.ஒரு தாவரமென்பதே 95 சதமானம் நீர்தான்.கார்பன் அமைப்புக்களுக்கு இடையில் வடிகட்டியைபோல பயன்படும் நீரைக்குறித்து சிந்தியுங்கள்.

தாவரங்களுக்கு சிறிதளவு வைட்டமின்களும் தாது உப்புக்களும் தேவை இவற்றை வேர்கள் வழியாக பெற்றுக்கொள்ளூகின்றன.

தாவரங்களுக்கு புதிய செல்களை உருவாக்கவும் அவற்றை பேணவும் ஏராளமான ஆற்றல் தேவைப்படுகின்றது. தாவரங்கள் ஆற்றலை சூரியனிடமிருந்து பெறுகின்றன.

கார்பனின்கதை

cross section of a leaf showing stomata

தாவரங்கள் கரியமில வாயுவை இலைத்துளைகளான ஸ்டொமேடாவழியே உறிஞ்சுகின்றன.

நாம் ஒரு தாவர இலையை பெரிதாக்கி  செல்களைக் காணும் அளவுக்கு நெருக்கமாக பார்த்தால், ஸ்டோமாட்டா எனப்படும் சிறிய இலைதுளைகளை காண்போம். ஸ்டோமாட்டா என்பது சிறப்புசெல்களுக்கு இடையிலான இடைவெளிகளில் இருக்கும் துளைகள். இந்த துளைகள் வழியேதான் தாவரங்கள் காற்றில் இருந்து கரியமில வாயுவை உறிஞ்சுகின்றன.

இலையின் உள்ளே நுழைந்தபின், கரியமில வாயு தாவர செல்களில் நுழைய முடியும். தாவர செல்கள் உள்ளே பசுங்கனிகங்கள் எனப்படும் சிறப்பு செல் பாகங்கள் உள்ளன, அங்குதான் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது.

Plant cell illustration

இந்த சித்திரத்தில் தாவர கலத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான
பசுங்கணிகங்களில் ஒன்று வட்டமிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

பச்சை ஒளியை பிரதிபலிக்கும் பசுங்கனிகங்களில் உள்ள மூலக்கூறுகள் காரணமாக தாவர செல்கள் பச்சை நிறமாகத் தெரிகின்றன. ஒவ்வொரு பசும் தாவரத்திலும் ஏராளமான பசுங்கனிகங்கள்  உள்ளன. மீதமுள்ள தாவரத்தின் பெரும்பகுதி பொதுவாக தெளிவாகத் தெரிகிறது

பசுங்கனிகங்களில், குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையை உருவாக்க கார்பன், நீர் மற்றும் ஆற்றல் பயன்படுத்தப்படுகின்றன. குளுக்கோஸை உருவாக்கும் முழு செயல்முறையும் ஒளிச்சேர்க்கை என்று அழைக்கப்படுகிறது

cellulose

குளுக்கோஸ் மூலக்கூறுகள் ஒன்றிணைந்து செல்லுலோஸை உருவாக்குகின்றன.

 அடுத்து, குளுக்கோஸ் மூலக்கூறுகள் ஒன்றிணைந்து செல்லுலோஸ் எனப்படும் நீண்ட சங்கிலிகளை உருவாக்குகின்றன. செல்லுலோஸ் பின்னர் செல் சுவர்கள் போன்ற தாவர கட்டமைப்புகளை உருவாக்க பயன்படுகிறது.

leaf growth

அதிக செல்கள் பிரிகையில் தாவரத்தின் இலைகளும் தண்டுகளும் வேர்களும் வளர்ந்து அளவில் பெரிதாகின்றன.

இந்த கட்டமைப்புகள் மற்றும் அவை வைத்திருக்கும் பொருட்களும் தண்ணீராலேயே உருவாக்கபட்டிருக்கின்றன.

புதிய செல் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்போது, ​​செல்கள் வளர்ந்து பிரிந்து புதிய செல்களை உருவாக்குகின்றன. இந்த புதிய செல்கள் புதிய தாவர வளர்ச்சியை உருவாக்குகின்றன. இது தாவரங்கள் பெரிதாக வளர உதவுகிறது.

எனவே நீங்கள் வாழ்க்கையின் சமையல் புத்தகத்தை உருவாக்கி, தாவர வளர்ச்சிக்கான செய்முறையைச் சேர்க்க விரும்பினால், பின்வருவனவற்றைச் சேர்ப்பீர்கள்.

water tree tamil

சில தாவரங்கள் 95 சதமானம் நீராலேயே ஆனவை என்பது தெரியுமா?
  • ஒரு தாவரத்தின் எடையில் 95% வரை இருக்கும் நீர், வேர்கள் வழியாக தாவரத்துக்குள் நுழைகிறது.

  • தாவரங்களின் மீதமுள்ள பெரும்பகுதியை உருவாக்கும் கார்பன், காற்றிலிருந்து வந்து அதன் இலைகளில் உள்ள துளைகள் வழியாக தாவரத்திற்குள் நுழைகிறது.
  • கரியமில வாயுவில் இருந்து ஆக்ஸிஜனும், நீரிலிருந்து ஹைட்ரஜனும் இலைகள் மற்றும் வேர்கள் வழியே தாவரத்தினுள் நுழைந்து குளுக்கோஸ் தயாரிப்பில் உதவுகிறது.
  • ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படும் ஆற்றல் சூரிய ஒளியில் இருந்து உறிஞ்சப்படுகிறது.

where plants get their mass

தாவரங்கள் தங்களின் வளர்ச்சிக்கு நீரும் காற்றிலிருக்கும் கரியமில வாயுவும் சூரியஒளியிலிருந்து ஆற்றலையும் பெறுகின்றனமேலும் விவரங்களுக்கு இந்த சித்திரத்தை சொடுக்குங்கள்.

இந்த பகுதியை கார்லா மோல்லர் மற்றும் சார்லஸ் காசிலெக் ஆகியோர் பங்களித்தனர். புகைப்படங்கள் சபின் டெவிச்.

மேலும் அறிந்து கொள்ள: ஒளியை உண்ணுதல்

தாவரங்கள் காற்றிலிருந்தா உருவாகின்றன?

கார்பனை குறித்த முழுமையான தகவல்களை அச்சு வடிவில் பார்க்க இங்கே சொடுக்குங்கள்

Be Part of
Ask A Biologist

By volunteering, or simply sending us feedback on the site. Scientists, teachers, writers, illustrators, and translators are all important to the program. If you are interested in helping with the website we have a Volunteers page to get the process started.

Donate icon  Contribute

 

Share to Google Classroom